உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றில் தற்போது ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

31 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0