உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய உந்துருளி ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட உந்துருளி ஓட்டுநரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கோஷல நேற்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் திங்கட்கிழமை (12) மாலை உந்துருளியில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குறித்த சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

உந்துருளி ஓட்டுரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபரான உந்துருளி ஓட்டுநர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

33 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0