உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஆறு மாதங்களாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 300 புதிய வாகனங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.

வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருவதாக இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில வாகனங்களுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு, நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரித் திருத்தங்கள் மற்றும் மேலதிக தண்டப்பணங்கள் (சுமார் 50 வீத கூடுதல் வரி) காரணமாகவே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வாகன வியாபாரிகள் அல்லர், மாறாகத் தமது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி குடும்பத் தேவைக்காக எல்லைத் தாண்டிய கடன் கடிதங்கள் முறையின்கீழ் வாகனங்களை இறக்குமதி செய்த சாதாரண பொதுமக்களாவர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா,
இந்த வாகனங்கள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எல்லைத் தாண்டிய கடன் கடிதங்கள் தொடர்பான வழக்குடன் தொடர்புடையவை என்று தெரிவித்தார்.

தற்போது உரிமையாளர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சாதாரண வரியைச் செலுத்தி வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், நீதிமன்ற வழக்கு முடியும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய முடியாது. விதிமுறைகளை மீறியதற்கான தண்டப்பணத்தைச் செலுத்தி, உடனடியாக வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய சூறாவளி காரணமாகத் துறைமுகத்தில் உள்ள வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

“நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றினோம், ஆனால் இப்போது தண்டிக்கப்படுகிறோம்” என வேதனை தெரிவிக்கும் உரிமையாளர்கள், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

33 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0