உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வலிகாமம் வடக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“வலிகாமம் வடக்குப் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தால் பயன்படுத்தப்படாத காணிகள்கூட தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன.” – இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு காணி விடுவிப்பு தொடர்பில் வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும், அந்த வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படுவதில்லை. குறிப்பாக வலிகாமம் வடக்கில் மட்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இவற்றில் பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டிய நிலைமையே உள்ளது.

இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும். பல காணிகள் இராணுவத்தினர் பயன்படுத்தாமல் பற்றைகள் மண்டிக் காணப்படுகின்றன.

அதேபோன்று பலாலி கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தேவையற்ற வகையில் உயர்பாதுகாப்பு நிலங்களாக உள்ளன. அதே இடங்களில் வயாவிளான் சந்தியை அண்மித்த மானம்பிராய் ஆலயத்தோடு இணைந்த 3 ஆலயங்களுக்கு உரிய காணிகளை ஏற்கனவே விடுவிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் விடுவிப்புச் சாத்தியமாகவில்லை.

அதேபோன்று குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில், இராணுவத்தின் விவசாய நடவடிக்கைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் காணிவிடுவிப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 1990 ஜூன் மாதம் இடம்பெயர்ந்து சென்ற அவர்களால், இன்றளவும் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன், பலாலி வீதி இரவு 7 மணிவரையே அனுமதிக்கப்படுகின்றது. அதை 24 மணிநேரமும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு விடுவிக்க வேண்டும். அதேபோன்று வயாவிளான் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையில் தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் செல்வதற்கான பாதை 35 ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0