உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜூலி சாங்குடன் மஹிந்த சந்திப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்குக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது.கடந்த 4 வருடங்களாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகச் செயற்படும் ஜூலி சாங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார்.

தனது இராஜதந்திரப் பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளைக் கொழும்பில் நடத்தி வருகின்றார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் இன்று பேச்சு நடத்தினார்.இதன்போது, “அமெரிக்க – இலங்கை கூட்டாண்மை குறித்து விவாதித்தோம்.” – என்று அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது (அரகலய) ஜூலி சாங்தான் அமெரிக்கத் தூதுவராகச் செயற்பட்டார்.அப்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் பதவி வகித்தனர்.

அரகலயவின் பின்னணியில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கும் இருந்தார் என மஹிந்தவின் சகாக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் மற்றும் சர்வதேச களத்தில் அமெரிக்கா கடும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தது.

மறுபுறத்தில் பஸில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அமெரிக்கக் குடியுரிமை இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ஷ துறந்தார் என்பது தெரிந்ததே.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0