உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி நீக்கப்படார்; கல்வி அமைச்சுப் பதவியும் பறிக்கப்பட மாட்டாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை. அந்தப் பதவியில் அவர் தொடர்வார். அத்துடன், அவரிடம் இருந்து கல்வி அமைச்சும் பறிக்கப்படமாட்டாது.” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த விஜித ஹேரத்,

“கல்வி மறுசீரமைப்பு என்பது பரந்துபட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் பிழை இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.

எனினும், குறுகிய நோக்கில் இந்த விடயம் தொடர்பில் அரசியல் நடத்தப்படுகின்றது.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார்.

கல்வி மறுசீரமைப்பு என்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செய்வோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

61 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

51 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0