உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டவர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளிய, ஹொரண, வனவாசல மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 35 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், வெடிமருந்துகள் மற்றும் ஐஸ் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், 60 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு உந்துருளி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள், வெளிநாட்டில் உள்ள இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ் கிராண்ட் பாஸின் மஹவத்த பகுதியில் ஒரு நபரைச் கொலை செய்ய தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள், நேற்று மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

61 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

50 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0