உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

ஒரு ஏக்கர் விதை நெல் செய்கைக்காக 13,600 ரூபா காப்புறுதிப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், பயிர்ச் சேதம் ஏற்படும் போது ஒரு ஏக்கருக்கு 1,80,000 ரூபா நஷ்டஈட்டுத் தொகையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியும்.

வெள்ளம், வறட்சி, கட்டுப்பாடற்ற நோய்கள், பீடை மற்றும் பூச்சித் தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இயற்கை அனர்த்தங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களையும் இந்தக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்குவதாக அச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

61 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

50 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0