உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சவால்களை கடந்து வந்த நீங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்று விகாராதிபதி தெரிவித்தார்.

மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

60 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

49 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0