உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யானை வேலி அமைக்கும் போது கைக்குண்டு மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று பிற்பகல் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16 எனும் முகவரியில் வசிக்கும் பந்துல சித்ரானந்த என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், தனியார் நிறுவனம் ஒன்று நேற்று யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

பரவிபாஞ்சான் குளத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் குழிகள் தோண்டிய போது, மண்ணுக்குள் புதைந்திருந்த பழைய கைக்குண்டு வெளிப்பட்டுள்ளது.

யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரால், கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விபரங்களை நாளை (11) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் அறிக்கையிட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

48 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

85 0 0