உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
39 பார்வைகள்

திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(10.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வரும் குச்சவெளி -சல்லிமுனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, குச்சவெளி- சல்லிமுனை என்ற இடத்தில் வீட்டுத் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் அவரது வீட்டிலிருந்து தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார்.ஒவ்வொரு நாளும் காலையில் குறித்த மின்சாரத்தை சுவிட்ச் ஓப்பண்ணி வருகின்ற நிலையில் இன்றைய தினம் அதனை துண்டிக்காமல் மறந்த நிலையில் இருந்துள்ளார்.

குறித்த சிறுவன் வழமை போன்று அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நிலையில் மின்சார கம்பியில் சிக்கி வீசி எறியப்பட்டதாகவும் இதனை அடுத்து குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

66 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

63 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

75 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

52 0 0