உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாகனம் வாங்கவிருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் அடையாள எண்(TIN) கட்டாயமக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்து உரிமையை மாற்றும்போது, வரி செலுத்துவோர் அடையாள எண்ணை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பதிவு தரவுத்தளம் மற்றும் உரிமை பரிமாற்ற தரவுத்தளத்தில் உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 05 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேற்படி TIN இலக்கம் தேவைப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண் மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

66 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

63 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

75 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

52 0 0