உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி போக்குவரத்து வழமைபோன்று சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.தற்போது நாடெங்கிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் நேற்றையதினம் தொடக்கம் தொடர்ச்சியான முறையில் மழை பெய்து வருகின்றது.

இதனால் குளம், கடலின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்து காணப்படுகின்றது.இந்நிலையில் தொடர்ச்சியான மழை கிடைப்பதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் வழமையை விட சற்று உயர்வடைந்துள்ளது.

எனினும் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.குறித்த பாலம் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதனால் பாலத்தினூடாக பயணம் செய்பவர்கள் சற்று அவதானத்துடன் பயணம் செய்வது சிறந்ததாகும்.

கடந்த டித்வா புயல் மற்றும் கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படிருந்தமை குறிப்பிடத்தக்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0