மின் கம்பத்துடன் மோதிய அம்பியூலன்ஸ்!
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த வண்டியின் சாரதி மற்றும், நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த அம்பியூலன்ஸ் கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரியளவிலான மின்கம்பத்தில் மோதியுள்ளதுடன், அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது.
இதனால் குறித்த பிரதேசத்தில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அம்பியூலன்ஸ் வண்டியும் முற்றாக சேதமடைந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.