உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹரிணிக்கு எதிரான பிரேரணைக்குஆளும் கட்சியினரும் ஆதரவு வழங்குக!- மொட்டுக் கட்சியினர் வேண்டுகோள்  

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

“கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.”- இவ்வாறு இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று எம்.பிக்களும் வாக்களிப்பார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்கின்றனர் எனில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.அதேவேளை, எமது நாட்டுக்குப் பொருத்தமானதொரு கல்வி மறுசீரமைப்பே அவசியம். எமது ஆட்சியின் கீழ் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

56 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

67 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

43 0 0