உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலக அளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

பணி ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு மிகவும் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஓய்வூதிய (Global Retirement Index) தரவரிசையின் வாழ்க்கச் செலவு பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற, வாழவும் ஓய்வு பெறவும் மிகவும் மலிவான ஐந்து நாடுகளை இன்டர்நெசஷல் லிவிங் இதழ் அடையாளம் கண்டுள்ளது.

காலநிலை, சுகாதார வசதிகள், வீசா நடைமுறைகள், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிய பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் இலங்கை முதல் இடத்தை பிடித்துள்ளது. குறைந்த செலவில் கிடைக்கும் உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் எளிதில் பெறக்கூடிய ஓய்வூதிய வீசாக்கள் இதற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,200 அமெரிக்க டொலர் செலவில் வசதியான, செழிப்பான வாழ்க்கை வாழ முடியும் எனவும், சீரான செலவுத் திட்டத்துடன் மாதத்திற்கு 1,000 டொலர் செலவிலும் வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர வரிசையில் இரண்டாம் இடத்தினை வியட்நாம் பெற்றுக்காண்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் சராசரி வாழ்வுச் செலவு மாதத்திற்கு 1,800 டொலருக்கு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த வாடகை வீடுகள் மற்றும் மலிவான சுகாதார சேவைகள் வியட்நாமின் சிறப்பம்சங்களாகும்.

இந்த தர வரிசையில் மூன்றாம் இடத்தை தாய்லாந்து பெற்றுள்ளது. சியாங் மை போன்ற நகரங்களிலும் ஹுவா ஹின் போன்ற கடற்கரை நகரங்களிலும் ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,000 டொலர் செலவில் நிம்மதியான வாழ்க்கை நடத்த முடியும். மலிவான வீடுகள், எளிதில் அணுகக்கூடிய சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

இந்த பட்டியலின் நான்காம் இடத்தில் இந்தோனேசியாவின் பாலி உள்ளது. கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவை மாதத்திற்கு 900 டொலருக்கு குறைவாக வாடகைக்கு பெற முடியும். பாலியில் மாதாந்த வாழ்வுச் செலவு 1,400 டொலரில் சமாளிக்க முடியும், மேலும் தரமான சுகாதார வசதிகளும் உள்ளன.இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை மலேசியா பெற்றுள்ளது.

பினாங்கில் மலிவான குடியிருப்புகள் கிடைப்பதுடன், ஒரு தம்பதியினர் மாதத்திற்கு சுமார் 2,500 டொலர் செலவில் வசதியாக வாழ முடியும். அங்கு பொது போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகள் நம்பகமானதும் குறைந்த செலவானதுமாகும்.இந்த இடங்களை தனித்துவமாக்குவது குறைந்த விலை மட்டுமல்ல, அதனுடன் கிடைக்கும் வாழ்க்கை முறையே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

38 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

48 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

43 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கச் சதி!

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல ஒற்றுமையாக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்குச் சில…

60 0 0