உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கச் சதி!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
61 பார்வைகள்

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கல்முனை மாநகரில் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல ஒற்றுமையாக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்குச் சில சக்திகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் எம்.எச்.ஏ. கரீம் (பி.ஏ) குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அதற்கு எதிராகக் குரல் கொடுத்த சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதி கோரியும் கல்முனையில் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

“எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில் கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பினரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் சமூகச் செயற்பாட்டாளர் எம்.எச்.ஏ. கரீம் உரையாற்றுகையில் தெரிவிக்கையில்:

“வடகிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் குரல்களை நசுக்குவதற்கும், கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவினை விவகாரம் மூலமாகவும் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இவை ஒருபுறமிருக்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய விவகாரத்திலும் கூட, தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், அரசியல் கட்சிகளும் பெருந்தன்மையுடன் குரல் கொடுத்து அமைதியைப் பேணினோம்.

ஆனால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஆடைச் சர்ச்சையின் போது, அரச வைத்தியசாலையில் கடமையாற்றிய ஊழியர்களை மற்றொரு வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர். ஒரு அரச வைத்தியசாலையில் வேலை செய்ய முடியாதவர்கள் இன்னொரு இடத்தில் வேலை செய்ய முடியும் என்றால், அங்கேயும் வேலை செய்ய முடியும். தற்போதைய அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை வழங்கத் தவறியுள்ளது.

இப்பிரச்சனைக்கு எதிராகச் சமூக நலன் கருதி முறையான குரல் கொடுத்த ஐந்து முஸ்லிம்கள் மற்றும் ஒரு தமிழ் சகோதரன் அடங்கலாக ஆறு பேரின் குரல்வளையை நசுக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிறிதொரு தரப்பினருக்கு ஆதரவாக ஆரம்பத்தில் பேசியவர்கள் இன்று அவர்களைக் கைவிட்டுள்ளனர்.

நாளை நீதிமன்றத்தின் மூலம் ஒரு மோசமான தீர்ப்பு வருமாயின், இவ்வாறான வழக்குத் தாக்கல்களை மேற்கொண்டவர்களே அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய அடக்குமுறைகள் களையப்பட்டு, கல்முனை மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

53 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

41 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0