உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீரற்ற காலநிலையிலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீற்றர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான கடல் வளத்தை அவர்கள் சட்டவிரோத முறையில் கண்முன் அழித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.

வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0