உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஹரிணிக்கு எதிரான பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டின் கல்விக் கட்டமைப்பு மேலும் சீர்குலைய இடமளிக்க முடியாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

கல்வித்துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி முறைமையைப் பாதுகாக்கும் நோக்கில் பொறுப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது நாட்டின் நலனுக்காகவே என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0