உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி சிறீதரனுக்கு சுமந்திரன் கடிதம் மூலம் அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
85 பார்வைகள்

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்று முன்தினம் (07.01.2026) திகதியிட்டு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

சிறீதரனின் கிளிநொச்சி, வட்டக் கட்சி முகவரிக்கு இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றார்.

அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட விடயங்களை இந்தக் கடிதத்தில் சுமந்திரன் விலாவாரியாக விவரித்திருக்கின்றார் எனத் தெரிகின்றது.

”இந்தப் பின்புலத்தில் இந்தப் பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம். கட்சிக்கும் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் மேற்படி பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தங்களுக்கும் கட்சிக்கும் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” – என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்சிக்கு அறிவுக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர், சிறீதரன் எம்.பியை வேண்டியுள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் சிறீதரன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஷிரந்தி ராஜபக்சவுக்கு அனுமதி மறுப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை…

27 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

78 0 0