உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரதமரை இழிவுபடுத்தியதாக ஆசிரியர் ஒருவருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவிற்கு எதிராக சேறு பூசியதாக ஆசிரியர் ஓருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கண்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனரின் இணைப்பாளர் சம்பத் விக்ரமசிங்க என்பவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பாடசாலை ஆசிரியர் பிரதமரின் உருவப்படத்தை வரைந்து இட்டுள்ள குறிப்பில் மிக இழிவான சேறுபூசும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு மூலம் பிரதமருக்கு பெரும் அவதூறு இழைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையின் அதிபர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0