உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க தவறினால் சேவை முடங்குமென எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (7) மாலை வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்து.இதையடுத்து தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தாக்குதலாளியை கைது செய்த வேண்டும் என்றும் கோரி தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை மறுதினம் தீவகத்தில் சேவை முடக்கத்தை முன்னெடுக்க உள்ளாதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில் – இன்று (7) மாலை யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வழித்தடம் 780 தனியார் பேருந்து, பயணிகளுடன் ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயம், அல்லைப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து ஏறி, “உனக்கு வாகனம் ஓட்டத் தெரியாதா” எனக் கேட்டு சாரதி மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.இதன்போது சாரதி கடுமையாக தாக்குதலுக்குள்ளாவதை அவதானித்த பயணிகள் தாக்குதலாளியை பேருந்தில் இருந்து இறக்கியுள்ளனர்.

இதையடுத்து கடும் தாக்குதலுக்குள்ளான சாரதி, பயணிகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், தாக்கிய நபர் தொடர்பான விவரத்தையும் மக்களின் தரவுகளுடன் பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.அத்துடன் கடமையின் போது கடுமையாக தாக்குதலுக்காளான சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த குறித்த சாலையின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது விடின் நாளை மறுதினம் 09 ஆம் திகதி பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

74 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

75 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

66 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0