உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
69 பார்வைகள்

டித்வா சூறாவளி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக பாடசாலை மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் அனுசரணையுடன் யுனெப்ஸ் விருத்தி அமைப்பின் பங்களிப்புடன் பொகவந்தலாவ, கொட்டகலை, சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 300 மாணவர்களுக்கும் அதிகமானவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் செயற்பாடுகள் கடந்த 4 மற்றும் 6ம் திகதிகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி செயற்பாடுகளை பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) நடைமுறைப்படுத்தியதுடன், குறிப்பிட்ட கற்றல் உபகரணங்களுக்காக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக சிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக குடும்பங்களுக்கு பல்வேறு நிவாரண பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து குடியேறுவதற்கான வசதிகள் உட்பட பொது இடங்களில் தங்க வைப்பதற்கான உதவிகள் அடங்கலாக பாதிக்கப்பட்ட மலையக குடும்பங்களுக்கு இருப்பிடங்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்கும் செயற்பாடுகளில் சிப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் நிறுவனத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் கருத்து தெரிவிக்கையில், மலையகத்தில் இயற்கையாகவே மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் மற்றும் அதற்கான வளங்கள் பற்றாக்குறை நிலவிவந்த காலத்தில் இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களது கல்வியை முற்றாக இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிறுவனங்களின் உதவிகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக தொடர்வதற்கு வழி சமைத்து இருக்கின்றது என்ற கருத்தினை முன்வைத்தனர்.

குறிப்பிட்ட கற்றல் உபகரணங்கள் முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரையும், ஐந்தாம் தரம் முதல் பத்தாம் தரம் வரையும், பத்தாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3 கட்டங்களாக பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

73 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

65 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

60 0 0