உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகத் தேவையில்லை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
66 பார்வைகள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் கூறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல எனவும் அவர் கூறினார்.

அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து பொறுப்புடன் அணுக வேண்டும் எனவும், ஜனநாயக முறையில் தீர்வுகள் தேடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டுவரும் நடவடிக்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளது.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

57 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

68 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

44 0 0