உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கில் கன மழையும், வேகமான காற்றும் அதிகரிக்கலாம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
56 பார்வைகள்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை முதல் வேகமான காற்று வீசுகையும் மிகமிகக் கனமழையும் பெய்யக்கூடும். இதனால், தாழ்நில பகுதி மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாகச் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு காலநிலை அவதானிப்பாளரும் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியருமான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

காலநிலை அவதானிப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாண கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையுள்ளது. தற்போது, வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்குப் பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது.

நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிகமிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8, 9, 10, 11ஆம் திகதிகளில் மிக மிகக் கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக – முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450 மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்குப் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கக்கூடும். இது, தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கை கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீற்றரை விடக் கூடுதலாக வீசக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

இந்தத் தாழமுக்கத்தை சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி, மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக இது தாழமுக்கம் – தாழ்வு மண்டலத்தோடு இணைந்த
நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம்
மிக உயர்வாகக் காணப்படும். ஆகவே, சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல் இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்குச் செல்லாது. ஆகவே, இதனையும் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

69 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

70 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

61 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

52 0 0