உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விபத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

புத்தாண்டை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அம்பலாந்தோட்டை – வளவை கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும், நிறுத்தாமல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சூரியவெவ, வீரியகம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் எம். சரத்குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், நாளை மறுதினம் (03) அம்பலாந்தோட்டையிலிருந்து புறப்படவிருந்தார்.

அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கார் அம்பலாந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

79 0 0