உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் 2026ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
61 பார்வைகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 2026ஆம் ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்ட, பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்கள் மற்றும் இயற்கை அனர்த்தினால் உயிரிழந்தவர்களுக்கும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சத்தியப்பிரமாண உறுதிமொழியை வாசித்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டதுடன், நிறைவாக தவிசாளரின் விசேட உரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், பிரதேச சபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

79 0 0