வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவாலயத்தில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்குமான ஆத்ம சாந்தி பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு இன்று ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நான்கு மத தலைவர்கள், மாவட்ட உதவி அரச அதிபர் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
இதேவேளை பேரிடர் ஏற்பட்ட மறுதினம் முதல் இன்றைய தினம் வரை குறித்த ஆலயத்தில் மூன்று நேரமும் இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வருவதுடன் உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இச் செயற்பாட்டில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், குட்செட் வீதி இளைஞர் அணியினர், வைரவர் புளியங்குளம் இராவணன் சனசமூக நிலையத்தினர், குட்செட் வீதி கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து நணன்கொடையாளர்களின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா முழுவதும் இவர்களது செயற்பாட்டை மக்கள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















