உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
16 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

2027 ‘பட்ஜட்’ முற்றிலும் தோல்வியடைந்த ஒன்று! : – ஊழல் தடுப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோஷன் விமர்சனம்!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
92 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாகும் என்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாக விமர்சித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் உண்மையான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் மட்டுமே என்று சுட்டிக்காட்டிய நிரோஷன் பாதுக்க, தற்போதைய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 33 சதவீதத்தை மாத்திரமே செலவிட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார்.

புதிய வருமான வழிகளை உருவாக்காமல், வரவு – செலவுத் திட்டச் செலவினங்களில் 86 சதவீதத்தை மக்கள் மீது கடுமையான வரிகளைத் திணிப்பதன் மூலமே அரசு பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் மற்றும் என்.டி.பி. வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 14 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி மோசடி குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் மௌனம் காத்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சனத்தொகையில் 63 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நிலையில், அடிமட்ட மக்களுக்குப் பொருளாதாரப் பலன்களில் 3.6 சதவீதம் மட்டுமே கிடைக்கின்றது என்றும் அவர் கூறினார்.

மக்கள் அடிப்படை உணவுத் தேவைகளின்றித் தவிக்கும்போது சிகிரியாவுக்கு இலத்திரனியல் நுழைவுச்சீட்டு வழங்குவது மற்றும் மின்சார ரயில் சேவைகள் குறித்துப் பேசுவது கேலிக்கூத்தானது என்று தெரிவித்த அவர், 1,753 பில்லியன் ரூபா வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்டப் பெறப்படும் கடன்களால் வட்டி வீதமும் பணவீக்கமும் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு அரசு பிரபல வர்த்தகர்களுடன் இணைந்து செயற்படுகின்றது என்றும் நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக ஒதுக்கப்பட்ட 20 பில்லியன் ரூபாவால் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஒதுக்கப்பட்ட நிதியைக் கூடச் செலவிட முடியாத ஜனாதிபதி, நாட்டை ஆள்வதை விட சேமிப்பு வங்கியின் தலைவராக இருப்பதே பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியின் உரை வரிசையைத் தீர்மானிப்பது எதிர்க்கட்சியே தவிர பிரதமர் அல்ல என்று தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கிய மக்கள் இன்று அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்காமல் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவது யாருக்காக? – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் அர்த்தபூர்வமானதாக இருக்க வேண்டுமாயின், மக்களை மீள்குடியேற்றுவதற்கு மானசீகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

95 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்!

தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என…

76 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கீரி கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தசஷ்டி – சூரசம்ஹார பெருவிழா!

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது. இன்று மாலை…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி நடன பயிற்சி நிலையத்தின் சாதனைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் சாதனையாளர்களான நடன கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு…

87 0 0