உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திடீரென நோய்வாய்ப்பட்ட மீனவர்கள் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
75 பார்வைகள்

கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவுக்குள்ளான இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகொன்றின் மூன்று (03) மீனவர்கள், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினரால் இன்று காலை (2026 நவம்பர் 09) துரிதமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2026 நவம்பர் 06ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏழு (07) மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற ‘செஷான் புதா 02’ (IMUL-A-1715 MTR) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், குறித்த மீனவர்களை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகை அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மூன்று (03) மீனவர்களும் P 450 படகில் ஏற்றப்பட்ட பின்னர், அவர்களுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு துரித நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

61 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

79 0 0