உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வு; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரண்டாம் இடம்.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
79 பார்வைகள்

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இதன்போது, தேசிய மட்டத்தில் நடைபெற்ற மதிப்பீட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரண்டாம் இடத்தைப் பெற்று விருதைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்ட இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சார்பில் அதன் நிர்வாகத்தினர் மற்றும் உத்தியோகத்தர்கள் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள், உற்பத்தித்திறன் மேம்பாடு, சேவைத் தரம் மற்றும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

தேசிய மட்டத்தில் கிடைத்துள்ள இந்த இரண்டாம் இடம், மன்னார் மாவட்டத்திற்கும் வைத்தியசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

61 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0
இலங்கை செய்திகள்

சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணிநேரமாக குறைக்கப்படும் – சட்டமா அதிபர் அறிவிப்பு

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச்…

79 0 0