கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொ**லை.!
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காடு தோட்டப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா, மரேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெயக்குமார் செல்வகுமார் என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவரின் தந்தையும் காயமடைந்துள்ளதுடன், அவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


