உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
6 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மேல் மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
74 பார்வைகள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் முகமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 2026 நவம்பர் 09 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி, கலாசார, கலை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளித் திருநாள் 2026.11.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதைக் கருத்திற்கொண்டு, பண்டிகையைக் கொண்டாடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கும் ஏதுவாக கௌரவ ஆளுநரின் அனுமதியுடன் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களும் தமக்குக் கீழ் இயங்கும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு 2026.11.09 அன்று உரிய விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜீ.எல். வர்ணன் பெரேரா கையொப்பமிட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

62 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

72 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

75 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

72 0 0