கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்.!
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கிராமிய வீதி அபிவிருத்தி, சுற்றுலா, விளையாட்டுத்துறைத் திணைக்கள வேலைகள், அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றின் வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள் கலந்து கொண்டனர்.



