கடந்த இரண்டு ஆண்டுகளில் 4056 துப்பாக்கிகள் பறிமுதல்.!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4056 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவற்றில் 97 – T-56 துப்பாக்கிகளும், ஒரு ஏகே- 47 (AK-47) துப்பாக்கியும், 143 கைத்துப்பாக்கிகளும், 105 ரிவோல்வர்கள் மற்றும் 397 12-போர் (12-bore) துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 597,964 போதைப்பொருள் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் 596,591 சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 4,009 கிலோ ஹெரோயின், 6,526 கிலோ ஐஸ் (ICE) மற்றும் 28,441 கிலோ கஞ்சா உள்ளிட்ட 43,726 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 224 பில்லியன் ரூபாயாகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


