உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருள் பணப்பரிமாற்றம்; பெண் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
93 பார்வைகள்

ஏழு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள் பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் குற்றவாளி ஒருவரின் சகோதரி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மடபாத பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட 5 சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியிருந்தது.

அந்த சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரி பிலியந்தலை பகுதியில் உள்ள இரு தனியார் வங்கிகளில் நடத்திச் சென்ற 4 கணக்குகள் தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இக்கணக்குகளுக்கு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களால் இக்கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளமை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த கணக்குகளை நடத்திச் சென்ற குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (6) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

79 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0