உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
90 பார்வைகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளின் கற்றல் நேரத்தைத் தரங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், மாகாண பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நேர அட்டவணையின்படி,

– தரம் 1 மற்றும் 2: காலை 7.30 முதல் முற்பகல் 11.45 வரை.

– தரம் 3 மற்றும் 4: காலை 7.30 முதல் பிற்பகல் 1.00 வரை.

– தரம் 5 முதல் உயர்தரம் வரை: காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அடுத்தடுத்த தரங்களுக்கு முன்னேறும்போது புதிய பாடத்திட்ட முறையும் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், தற்போது தரம் 1-இல் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் 5-ஐ அடையும் ஆண்டில் அவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்களை 2030ஆம் ஆண்டு சாதாரண தரத்திற்கும், 2033ஆம் ஆண்டு உயர்தரத்திற்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

79 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0