உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
98 பார்வைகள்

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக டி. ஜே. ராஜகருணா ‘அத தெரணவுக்கு தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. எம்மிடம் தேவையான அளவு எண்ணெய் கையிருப்பு உள்ளது. எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தனியார் நிறுவனங்கள் தமக்கு நஷ்டம் என்பதால் சில பகுதிகளில் எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.

அப்படியான இடங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் இல்லை என்றால், அந்த இடங்களில் வரிசைகள் உருவாகின்றன.

அதுவே பிரச்சினையாக மாறியுள்ளது. செபெட்கோ நிரப்பு நிலையங்கள் அருகில் இல்லாத 52 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

செயலாளரின் தலைமையில் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து நடாத்தப்பட்ட கலந்துரையாடலில், அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

உண்மையில் அவர்கள் தமக்கு நஷ்டம் என்பதால் எண்ணெய் விநியோகிப்பதைக் குறைத்தனர். விநியோகிக்கும் அளவிலிருந்து அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால் சில பிரதேசங்களில் அவர்களது எண்ணெய் விநியோக  குறைபாடு காரணமாக சில இடங்களில் சிறிய வரிசைகள் வரக்கூடும் என தலைவர் டி. ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

79 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0