உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்சவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
79 பார்வைகள்

கிரிஷ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் நாமல் ராஜபக்சவை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவும், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் நாமல் ராஜபக்ச கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் வானூர்திக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி அவரை சிறைச்சாலை காவலில் வைக்கவும், எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாகவே, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் சிறைச்சாலை காவலில் இருந்த நாமல் ராஜபக்ச இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவான் நியமனம்.!

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (9) தனது கடமைகளைப்…

80 0 0
இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு; போக்குவரத்து பாதிப்பு.!

இன்று (6) பிற்பகல் வேளையில் பலத்த மழை காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தடங்கல்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை.!

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று…

80 0 0
இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான மருத்துவ முகாம்.!

கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பழைய மாணவிகள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை…

78 0 0