பூனாவ கடற்படை முகாம் அருகே கோர விபத்து : ஒருவர் ப@லி!
பூனாவ கடற்படை முகாமுக்கு அருகில் மோட்டார் வாகன சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியின் வலது பக்கமாகச் சென்ற மோட்டார் வாகனம், எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






