உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளைஞன் கொ**லை; நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
76 பார்வைகள்

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரை கொடூரமாகப் படுகொலை செய்து, அவரது உடலை எரித்து, எலும்புத் துண்டுகளைக் களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த இளைஞன் காணாமல்போனமை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு (CCDB) முன்னெடுத்திருந்தது.

இந்த விசாரணைகளின் மூலம், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கிராண்ட்பாஸ், கம்பி கொடுவவத்தை பகுதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் இடமொன்றில் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் எனவும் அந்த இளைஞர் காணாமல்போனதைத் தொடர்ந்து, அவருடன் மது அருந்திய குழுவினர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், கடந்த 2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி மாபோல – களு பாலம் அருகில் மற்றும் மஹர பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகன பழுதுபார்க்கும் இடத்தில் வைத்து அந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவரது சடலம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெப்பிலியவல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் ஏனைய பாகங்கள் கொஸ்கம – ரன்வல பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பூகொட நீதவான், வதுபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கம்பஹா குற்றவியல் தளப் பரிசோதனை அதிகாரிகள் முன்னிலையில் பெப்பிலியவல பகுதியில் களப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, உந்துருளி சாவியொன்று, தாயத்து, சில எலும்புத் துண்டுகள் மற்றும் எரிந்த கூடாரத் துணியின் பாகங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாக பொறுப்பேற்கப்பட்டன.

அன்றைய தினமே ரன்வல பாலத்துக்கு அருகிலுள்ள களனி ஆற்றிலும் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று (2) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்க.!

வவுனியா வடக்கு பிரதேசத்தில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதுடன், குறித்த கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு…

63 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரடைஸ்வத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழில் ஒரே நாளில் பறிபோன உயிர்கள்.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த உந்துருளி வேகக்…

68 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகுகல பகுதியில் அமைந்துள்ள வாவியில் மூழ்கி நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லகுகல பகுதியைச்…

78 0 0