உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிரணிகளை விமர்சிப்பதிலேயே நேரத்தை வீணாக்குகின்றார் அநுர.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தாமல் பெரும்பாலான நேரத்தை எதிர்க்கட்சியினரையும் சஜித் பிரேமதாஸவையும் விமர்சிப்பதிலேயே செலவிட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து நிரோஷன் பாதுக்க மேலும் சுட்டிக்காட்டுகையில்,

“இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மகாவலி திட்டம், 10 இலட்சம் வீடுகள் திட்டம், கொழும்புத் துறைமுக வளர்ச்சி, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்புரட்சி போன்றவற்றைத் தகுதியான அமைச்சர்களிடம் ஒப்படைத்து நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு முறையான நிர்வாகத் திட்டமுமின்றி, தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிக்கொண்டு மட்டுமே நேரத்தைக் கழித்து வருகின்றார்.

மேலும், நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ், நிதி அமைச்சில் இதுவரை 2.5 மில்லியன் டொலர்களும், தனியார் வங்கியொன்றில் 14 பில்லியன் ரூபாவும் காணாமல்போயுள்ளன. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஒருவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் கிராம மட்டத்தில் அரசை விமர்சிப்போரின் பட்டியலைச் சேகரிக்கக் கோரப்பட்டுள்ளது அபிவிருத்தியை நோக்கியதாக இல்லாமல் அடக்குமுறையை நோக்கிய நகர்வாகவே உள்ளது.” – என்றார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பேசுகையில்,
“தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இலாபத்தில் இயங்கிவரும் போதிலும், குடிதண்ணீரைச் சுத்திகரிக்கத் தேவையான குளோரின் மற்றும் அலுமினியம் போன்ற இரசாயனப் பொருட்களின் இருப்பு முற்றாகத் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. வழக்கமான தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தவிர்க்கப்பட்டு, காலாவதியான இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டால் மக்களின் சுகாதாரத்துக்குப் பெரும் ஆபத்து ஏற்படும். அரசு உடனடியாகப் புதிய குளோரின் இருப்புகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

அதேபோல், அம்பாந்தோட்டை சினாபேக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், அடானியின் 434 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் மற்றும் 331 மில்லியன் டொலர் மதிப்பிலான சீன முதலீட்டுத் திட்டம் ஆகிய முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளன.

ஊழல் விவகாரங்களில் தொடர்புடைய நபர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொலன்னறுவை பகுதியில் விவசாயிகள் நெல்லுக்குக் கிலோவுக்கு 120 ரூபா கூடக் கிடைக்காமல் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.” – என்றார்.

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றச் சபாநாயகருக்கு எதிராக 50 காரணங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 காரணங்கள் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிலிருந்தே எடுக்கப்பட்டவையாகும்.

சபாநாயகர் சட்டவிரோதமான முறையில் 3 உத்தியோகபூர்வ இல்லங்களைப் பராமரித்து வருவதுடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரும் தகவல்களை நாடாளுமன்ற ஊழியர்கள் வழங்கக் கூடாது எனத் தடுத்தும் வருகிறார். இதனால் அவர் மீது ஊழல் விசாரணைகள் நிலுவையில் காணப்படுகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்க.!

வவுனியா வடக்கு பிரதேசத்தில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதுடன், குறித்த கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு…

63 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரடைஸ்வத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழில் ஒரே நாளில் பறிபோன உயிர்கள்.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த உந்துருளி வேகக்…

68 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகுகல பகுதியில் அமைந்துள்ள வாவியில் மூழ்கி நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லகுகல பகுதியைச்…

78 0 0