உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
100 பார்வைகள்

உலகளாவிய தரத்திலான மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (JMH DIAGNOSTIC & SPECIALISTS INFIRMARY) மத்திய கிழக்கு நாடுகளுக்கான நவீன மருத்துவ பரிசோதனை நிலையமும் ‘GLOBAL SKILLS HUB’ திறன் அபிவிருத்தி மையமும் நேற்று மிகச் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகச் செல்வோர் மற்றும் பிராந்திய பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உலகளாவிய அளவில் உயர் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் இப் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் முகாமையாளர் யூ.எல்.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளரும் பிரபல வைத்திய நிபுணருமான டொக்டர் றிஸான் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பிரதம அதிதி உரையாற்றுகையில்,
இப் புதிய மையத்தின் வருகையானது பிராந்தியத்தின் மற்றும் நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரும் பங்களிப்பாக அமையும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணி நிமித்தம் செல்ல முனையும் நபர்களுக்கான மருத்துவ பரிசோதனைத் தேவைகளை மிக விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பூர்த்தி செய்ய இது வழிவகுக்கும்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் நோயாளர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்குமான மருத்துவ சேவைத் தேவைகளுக்கும் இதுவொரு முக்கிய ஆதரவாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.

இக் கோலாகல திறப்பு விழா நிகழ்வில் சுகாதாரத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்க.!

வவுனியா வடக்கு பிரதேசத்தில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதுடன், குறித்த கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு…

63 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரடைஸ்வத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

யாழில் ஒரே நாளில் பறிபோன உயிர்கள்.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த உந்துருளி வேகக்…

68 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகுகல பகுதியில் அமைந்துள்ள வாவியில் மூழ்கி நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லகுகல பகுதியைச்…

78 0 0