உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் வெளியான புதிய பட்டியல்; கொடுப்பனவை இழந்த பல இலட்சம் மக்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
80 பார்வைகள்

இலங்கையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிவரும் காலங்களில் தீவிர வறுமை மற்றும் வறுமை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, தீவிர வறுமைப் பிரிவினருக்கு மாதாந்தம் 17,500 ரூபாயும், வறுமைப் பிரிவினருக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்.

புதிய நடைமுறையின் கீழ் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 பேர் அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது பட்டியலில் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.

புதிய பெயர் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்று ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

மேலும், 7 இலட்சத்து 40 ஆயிரத்து 127 குடும்பங்களை உள்ளடக்கிய இரண்டாவது பெயர் பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதல் பட்டியலில் உள்ள, புதிதாகத் தகுதிபெற்ற பயனாளிகளுக்கான பணம் நவம்பர் 27 அன்று அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

அதேவேளையில், வங்கிக் கணக்குகளைத் திறப்பதை எளிதாக்கும் கடிதங்கள் நவம்பர் 12 முதல் வழங்கப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு சந்தேகநபரும் உ**யிரிழப்பு.!

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்.!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

67 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்.!

நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும்…

62 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா.!

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண…

53 0 0