நல்லவற்றை நினையுங்கள்: ‘சீன்’ திரைப்பட நிகழ்ச்சியில் சூர்யா அட்வைஸ்
டுபாயில் நடைபெற்ற ‘சீன்’ (Scene) திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா, நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஈர்ப்பு விதி குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, “உங்கள் அனைவரிடமும் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கு இருக்கிறது.
அதில் நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காணொளியைப் பார்த்தால், அதேபோன்ற மேலும் 15 காணொளிகள் உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.
அதாவது, நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, அதையே உங்கள் வாழ்க்கையிலும் ஈர்க்கிறீர்கள். எனவே, உங்கள் மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
நல்லவற்றை நினைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் ஈர்த்துக்கொள்ளுங்கள்” என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


