உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புலிகளின் நினைவேந்தலுக்கு அனுமதி; மக்களின் உரிமைகளை அடக்கப் புதிய சட்டங்களா? : சர்வஜன அதிகாரம் கட்சி கொந்தளிப்பு!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் தற்போதைய அரசு, மறுபுறம் நாட்டின் சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களை ஒடுக்குவதற்காகப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயல்கின்றது என்று சர்வஜன அதிகாரம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் அரசு காட்டும் தாராளமய அணுகுமுறையையும், மறுபுறம் நாட்டு மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது தவறாகப் பயன்படுத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

அரசை விமர்சிப்பவர்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் நிலை உருவாகக்கூடாது.

இவ்வாறான சட்டங்கள் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தையும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஜனநாயக உரிமையையும் கடுமையாகப் பாதிக்கும்.

அத்துடன், கூட்டாட்சி முறை அல்லது சமஷ்டி தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் அரசு, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறி வருகின்றது.

பெறுமதி சேர் வரி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் கல்வி உபகரணங்கள் மீதான வரிகள், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது. அரசு இதற்கு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன.

நேரடியாகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்குப் பதிலாக, சட்டங்களையும் கடுமையான ஒழுங்குவிதிகளையும் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு நிகரானதொரு அடக்குமுறைச் சூழலை உருவாக்க அரசு முற்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருக்கோவிலில் கிணற்றில் இருந்து T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து,…

67 0 0
இலங்கை செய்திகள்

காவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம…

74 0 0
இலங்கை செய்திகள்

பொத்துவிலில் யானை உயி@ரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என விசாரணை!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள்…

66 0 0
இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம் மற்றும் முற்பணம் வழங்கப்பட வேண்டும்!

இவ்வருடம் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் தீபாவளி முற்பணத்தை நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க…

78 0 0