உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை : பொதுமக்கள் கோரிக்கை

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
76 பார்வைகள்

எதிர்வரும் பருவமழை மற்றும் அனர்த்த காலங்களை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் பருவமழை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று மற்றும் சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது அவசியமாகியுள்ளது.

வீதியோரப் பாரிய மரங்களை அகற்றுதல்

கல்முனை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதியோரங்களில் அமைந்துள்ள பாரிய ஆலமரங்கள், மருத மரங்கள் மற்றும் காயா மரங்கள் போன்ற ஆபத்தான மரங்கள் உரிய முறையில் வெட்டி அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான பாரிய மரங்கள் திடீரென முறிந்து விழுந்தமையினால் பல மணிநேரம் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டதுடன், மரங்களை அகற்றுவதற்கு நாள்கணக்கில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன், மின்கம்பங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்ததனால் பல நாட்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும், சில இடங்களில் இத்தகைய சம்பவங்களினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடிகான்களைத் துப்பரவு செய்தல்

மழை காலங்களில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள வடிகான்கள் உரிய முறையில் துப்பரவு செய்யப்பட வேண்டும். கல்முனை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் வடிகான்கள் தூர்வாரப்படாமல் காணப்படுவதால் மழைநீர் வடியாமல் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, எதிர்வரும் அனர்த்த அபாயங்களில் இருந்து பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட அரச மற்றும் உள்ளூராட்சித் திணைக்களங்கள் உடனடியாக ஒன்றிணைந்து வீதியோர ஆபத்தான மரங்களை அகற்றுதல் மற்றும் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

65 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

74 0 0
இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப்…

73 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

86 0 0