உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தரவரிசையில் முன்னேறியது இலங்கை கிரிக்கெட் அணி!

விளையாட்டுச் செய்திகள் 3 மணி நேரம் முன்
87 பார்வைகள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினைத் தொடர்ந்து, ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இலங்கை அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதன்மூலம் இங்கிலாந்து அணியை இலங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது.


ஐசிசி தரவரிசையின்படி, இலங்கை அணி 41 போட்டிகளில் விளையாடி 3,896 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 95 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று (23)  வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியல் உறுதிப்படுத்துகிறது.


முன்னதாக கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை 7 ஆவது இடத்திலும் இங்கிலாந்து 6 ஆவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


தற்போதைய தரவரிசை நிலவரப்படி, ஆப்கானிஸ்தான் அணி 94 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து அணி 93 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 8வது இடத்திற்கும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.


இதனிடையே, 115 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் தொடர்வதுடன், நியூசிலாந்து (109), தென்னாப்பிரிக்கா (104), பாகிஸ்தான் (103) மற்றும் அவுஸ்திரேலியா (102) ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.


ராவல்பிண்டியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 430 என்ற இமாலய இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாகத் துரத்திப்பிடித்தது.


ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான இலக்குத் துரத்தல் இதுவாகும் என்பதுடன், இந்தச் சிறப்பான வெற்றியே இலங்கை அணியின் தரவரிசை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை.!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

குத்துச் சண்டைப் போட்டி; வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாவட்டங்களுக்கிடையில் மாகாண ரீதியாக பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட…

91 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறிக்குத் தங்கப் பதக்கம்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் இலங்கையின் பிரதீப்…

93 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மைல்கல்! : சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு…

91 0 0