உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திரையரங்கிலிருந்து பெருந்தொகையான தோட்டாக்கள், மற்றும் துப்பாக்கிகள் மீட்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
64 பார்வைகள்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) மாலை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திரையரங்கினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு போர் 12 துப்பாக்கி, போர் 12 ரக தோட்டாக்கள் 398, போர் 16 ரக தோட்டாக்கள் 278, பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மறைபரப்பு சந்தை நிகழ்வு

உலக மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் காலை விசேட திருப்பலியின் பின்னர் மறைபரப்பு…

38 0 0
இலங்கை செய்திகள்

விரைவில் எரிவாயு விநியோகம் : லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

3,900 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக ‘லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்’ (Litro…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ரூ.2 கோடி பெறுமதியான 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! ஒருவர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 உயர் திறன் மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹப்புத்தளையில் பலத்த மழை: இரு வீடுகள் மீது மண்மேடு சரிவு!

ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால் குறித்த…

68 0 0