உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
76 பார்வைகள்

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நிர்வாக இழப்பையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்று எரிசக்தி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக சந்தையிலும் உள்நாட்டிலும் டீசல் விலை அதிகரித்ததால் மின் உற்பத்திக்கான செலவு கணிசமாக உயர்ந்தது. இதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்குச் சுமை ஏற்படுவதைத் தடுக்கவும் அரசு 15 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்கியது.

குறிப்பாக, மாதத்துக்கு 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரின் மின் கட்டணத்தை உயர்த்தாமல், கூடுதல் செலவை அரசே ஏற்றுக்கொண்டது.

நாட்டில் நிலக்கரிப் பிரச்சினை இல்லாதிருந்தாலும் கூட, சர்வதேச விலை ஏற்றத்திலிருந்து எளிய மக்களைப் பாதுகாக்க இந்த மானியத்தை அரசு வழங்கியே தீர வேண்டியிருந்திருக்கும்.

நாட்டில் ஆரோக்கியமான சந்தைப் போட்டியை உருவாக்குவதற்காகச் சில தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக உரிமம் வழங்கப்பட்ட போதிலும், அதிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட பலன் கிடைக்கவில்லை. நெருக்கடியான சூழலில் தங்களது இலாப வரம்புக்கு ஏற்ப விலை அமையாதபோது, சில தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முற்படுகின்றன.

சில தொலைதூரப் பகுதிகளில் தனியார் எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பதால், பொதுமக்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனைச் சமாளிக்கும் வகையிலும், தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும், சட்ட ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு புதிதாக 75 எரிபொருள் நிலையங்களை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் தீர்மானம்.!

அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பிரதி சபாநாயகர்…

60 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் கருவலகஸ்வெவ, மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10…

69 0 0
இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் மின்சார விநியோகத் தடை.!

இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!

நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில்…

51 0 0